மகாபாரதமும் இஸ்லாமியர்களும்
சனாதனவாதிகள் மகாபாரதம் மிகவும் பழமையான ஒன்று என தொடர்ந்து கூறுவார் அதன் காலத்தை வறையை செய்வது கடினமே என்பார்கள் காலத்தை கணிக்கவே முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர் ஆனால் இந்த கட்டுரை மூலம் அதன் காலத்தை அறியலாம் மேலும் மகாபாரதம் தொடர்பான பல புதிய தகவல்களை பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்களின் ஆய்வுகளின் வழியாக விளக்க முயற்சி செய்துள்ளேன்.
மகாபாரதம் மூன்று பதிப்புகளாக உருவாகியுள்ளது இதில் முதல் பதிப்பு "ஜெயா" என அழைக்கப்பட்டுள்ளது இது வியாசரால் எழுதப்பட்டது .
இரண்டாவது பதிப்பு வைஷாம்பெயன இவர் வியாசரின் மாணவர் இவர் மட்டுமல்லாமல் சுமன்டு ,ஜெய்மினி, பைலா, ஷுக்கா என நான்கு மாணவர்கள் வியாசருக்கு இருந்தனர்
இவர்கள் நால்வரும் ஒவ்வொரு பதிப்பை எழுதினார்கள் இவை அனைத்தும் வைஷாம்பெயன தொகுத்து தன்னுடைய பாரத பதிப்பை
வெளியிடுகிறார்
இவர்களுக்கு பிறகு இறுதியாக சௌடி என்பவர் மேலே கூறப்பட்ட அனைத்தையும் தொகுத்து தன்னுடைய பங்கிற்கு பல மாற்றங்களை செய்து அது மகாபாரதமாக இறுதி வடிவம் பெறுகிறது.
மகாபாரதம் முதல் பதிப்பு மூன்றாவது பதிப்பு வரை எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என அதன் ஸ்லோகங்ளை பார்த்தால் நமக்கு விளங்கும் வியாசர் பதிப்பில் -8800 ஸ்லோகங்கள் இருந்தது
வைஷாம்பெயன எழுதிய பதிப்பில் சற்று கூடுதலாக -24000 எனவும் இறுதியாக வந்த சௌடியின் மகாபாரதத்தில் -96836 ஸ்லோகங்கள் உருவாகியிருந்தன
வியாசர் எழுதிய மகாபாரதத்தில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரை பற்றி தான் இருந்தது வைஷாம்பெயன எழுதிய மகாபாரதத்தில் செயற்கையான வேலைகள் நிறைந்து பிரசங்கங்கள் மத கோட்பாடுகள் இருந்தன
சௌடி தான் ஒரு புகழ்பெற்ற காவியத்தை படைக்கவிரும்பினர் எனவே முந்தைய தொகுப்புகளோடு சுயம்புவாக இருந்த வரலாற்று கதைகள் கதாபாத்திரங்களை தன்னுடை படைப்பில் சேர்த்து கொண்டார் ,இவ்வாறு சேர்ப்பதால் அவற்றை எளிதில் மறையாமலும் மறக்காமல் வைக்கலாம் என எண்ணினார்
பாரதத்தை கற்றல் மற்றும் அறிவு களஞ்சியமாக உருவாக்க எண்ணினார் எனவே அரசியல், வில்வித்தை, புவியியல் முதலிய பலவற்றை சேர்த்தார் பாரதம் மகாபாரதம் ஆனது
பேராசிரியர் ஹோப்கின்ஸ் மகாபாரத்தின் காலமாக கி.பி 200-400 வரை சொல்கிறார் ஆனால் மகாபாரதத்தில் ஹன்ஸ் பற்றிய குறிப்புகள் உள்ளன ஹன்ஸ்கள் ஸ்கந்தகுப்தரால் கி.பி.-455 இல் வீழ்த்தப்பட்டவர்கள் கி.பி 528 வரை அவர்களின் படையெடுப்பு நடைபெற்றது எனவே மகாபாரதம் இவரின் காலம் அல்லது இவருக்கு பிறகு இயற்றப்பட்டு இருக்கலாம்.
ஆனால் மகாபாரதத்தின் மற்ற குறிப்புகள் இஸ்லாமியர்களை பற்றி உள்ளது இது நமக்கு வியப்பாக இருக்கலாம் ஆனால் 190வது அத்தியாத்தில் வன பர்வா 29 இல் அதன் ஆசிரியர் கூறுகிறார் " உலகம் இஸ்லாமியமாக இருக்கும் "
யாகங்கள் , மத சடங்குகள் நடைபெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது இது நேரடியாக இஸ்லாமியர்கள் பற்றியும் வருங்காலாம் பற்றியும் குறிக்கிறது எனவே மகாபாரதத்தின் இந்த பகுதிகள் இஸ்லாமிய படையெடுப்பிற்கு பிறகு எழுதப்பட்டது என அறியலாம் . மேலும் அதே அத்தியாத்தில் 59 இல் வர்சாளர்களால் பிராமணர்கள் பயந்து காப்பாற்ற ஆள் இல்லாமல் உலகம் முழுவதும் வேதனையில் அழுது திரிவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
இதில் இவர்கள் வர்சாளர்களால் என குறிப்பிடுவது பௌத்தர்களை அல்ல ஏன் என்றால் பௌத்தர்கள் ஆட்சி செய்யும் போது பிராமணர்கள் மற்ற மக்கள் போல மரியாதையாக நடத்த பட்டனர் .வர்சாளர்களால் என்பது கலாச்சாரமற்றவர்கள் என்று பொருள் இஸ்லாமிய படையெடுப்பாளர்களை தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வன பர்வா அத்தியாயத்தில் 65,66,67 ஆகியவற்றில் " சமுதாயம் ஒழுங்கற்றதாக இருக்கும் " மக்கள் எடுகாஷை வணங்குவார்கள் , கடவுளை வணங்குவதை நிறுத்துவார்கள் இதில் கடவுள் என குறிப்பிடுவது சனாதன கடவுளை , சூத்திரர்கள் தங்களுக்கு மேலானவர்களுக்கு பணிவிடை செய்யமாட்டார்கள் உலகம் முழுவதும் எடுகாஸால் கவரப்பட்டருக்கும் யுகம் முடிவுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது
இதில் சூத்திரர்கள் என்பவர்கள் பூர்வகுடி மக்களான பட்டியலின மக்கள் இல்லை .பட்டியிலன மக்கள் அவர்னர்கள் ,அவர்னர்கள் என்றால் வர்ணமற்றவர்கள் சாதியற்றவர்கள் என பொருள் . சனாதன(இந்து) மத படி நான்கு வர்ணம் உண்டு இது அனைவரும் அறிந்ததே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திர் இதில் சூத்திரர் மேலே உள்ள மூன்று வருணத் திற்கும் சேவை செய்ய வேண்டும் கல்வி கற்க முடியாது பொருள் சேர்க்க கூடாது இப்படி பல கொடுமைகள் அனுபவித்தவர்கள்.
எடுகாஸ் என்றால் சுவற்றின் வலிமை தரும் கட்டை போன்ற அமைப்பு மேலும் எடுகா என்றால் இஸ்லாமியர்கள் தங்கள் தொழுகைக்கு முன் இருக்கும் இடம் இதனால் தெளிவாவது முஹம்மது கோரி அவர்களின் படையெடுப்பிற்கு பிறகே மகாபாரதம் எழுதப்பட்டு இருக்கும் மேலே குறிப்பிட்ட எடுகாஸ் அல்லது எடுகா என்பது இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தும் இடம்
மேலும் வரலாற்று படி முதல் இஸ்லாமிய படையெடுப்பு கி.பி -712 இல் இப்பினே காசிம் என்பவரால் நடத்தப்பட்டது , வட இந்தியாவில் சில நகரங்களை அவர் கைப்பற்றி அங்கு இருந்த கோவில்கள் ,விகார்கள் அழிக்க பட்டது ஆனாலும் அவர் அங்கு மசூதிகள் கட்ட அவர் ஆர்வம் காட்டவில்லை .ஆனால் முஹம்மது கோரி இவற்றை எல்லாம் கட்டினார் .இதிலிருந்து நமக்கு தெரியவருவது கி.பி 1200 வரை மகாபாரதம் முழுமை அடையவில்லை. எனவே தங்களுடைய புராணங்கள் மிக பழமையான ஒன்று என அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்ல காரணம் தங்களுடைய கலாச்சாரம் பழமையான ஒன்று என அவர்கள் நிறுவ தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் இந்த கட்டுரை மூலம் நீங்கள் இந்த மகாபாரதமும் அதன் காலத்தையும் உணரமுடியும்
குறிப்பு: இந்த கட்டுரைக்கு நான் எடுத்து கொண்ட நூல் பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்களின் எழுதும் பேச்சும் ஆங்கில புத்தகம் - VOL -3
பிரேம் குமார்
Great...
ReplyDeleteThank you
Delete