வஞ்சிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மக்கள் OBC(BC+MBC)
இட ஒதுக்கீடு என்றால் என்ன அது எதற்கு வழங்க படுகிறது யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்கிற புரிதல் பலருக்கு இல்லை.இட ஒதுக்கீடு என்றால் பட்டியிலன மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டும் தான் என ஒரு பொது புத்தி உள்ளது.நமக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாதது பெரும் பின்னடைவு.
மேடை தோறும் முழக்கமிடும் அரசியல்வாதிகள் பட்டியிலன மக்களுக்கு தாங்கள் தான் எல்லாம் செய்தோம் என போட்டி போட்டுக்கொண்டு பொய்களை பரப்பவே நேரம் சரியாக இருக்கும்.
பண்டிதர் அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சினுவாசம் பிள்ளை பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் தங்கள் உழைப்பால் வாங்கிக்கொடுத்த உரிமைகள் எல்லாம் இவர்களும் இவர்கள் தலைவர்களும் இயக்கங்கள் நடத்தியும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தும் வாங்கி கொடுத்தது போல பேசுவார்கள் .
இவர்களின் தலைவர்களும் இவர்களும் முதலமைச்சர் ஆவதும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் ஆவதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் என மறந்துவிடுகிறார்கள் திட்டமிட்டு மறைத்தும் விடுகிறார்கள்.சொத்தும் நிலமும் இருந்தால் தான் ஓட்டுரிமை என இருந்த காலமும் உண்டு .
இது குறித்து மேலும் பலவற்றை பேசலாம் ஆனால் இங்கு இப்போது பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளது எனவே அதனை பற்றி எழுதுவது தான் முறையாக இருக்கும் .
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழலில் அவர்கள் அதை பற்றி விழிப்புணர்வு அடைந்ததாக கூட தெரியவில்லை எனது நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர் கூட இதை பற்றி சமூக வலைத்தளங்களிலோ அல்லது வேறு எங்கேயும் விவாதித்தாக தெரியவில்லை .
இதை பற்றிய விவாதம் பட்டியிலன மக்களல் மத்தியில் தான் நடக்கிறது .பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பேசுவது பெரும்பாலும் இவர்கள் தான் .
பட்டியிலன மக்கள் விவாதம் செய்ய காரணம் இயல்பாகவே சமூகநீதி என்பது அவர்களின் கொள்கைகளில் ஒன்று இது பல நூற்றாண்டு வரலாற்றை கொண்டது ஆனால் அவற்றை பற்றி பேசினால் நாம் கட்டுரையின் மைய கருத்தை விவாதிக்க முடியாது.
முந்தய தலைமுறை அவர்களுக்கு கற்று தந்த பாடம் அவர்கள் சாதி பேதமற்ற சங்கம் பல வற்றை நடத்தியவர்கள் இவர்களால் சாதி மதம் இனம் மொழி என எதையும் பார்க்காமல் சமூக நீதி ,சமத்துவம் முற்போக்கு பேசும் எந்த இயக்கத்திலும் எளிதாக இணைந்து செயல்பட முடியும் .
ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அத்தகைய விழிப்புணர்வு இல்லை என்பது வருந்த தக்க ஒன்று இந்த நிலை சமமான ஒரு சமூகத்தை உருவாக்க முட்டுக்கட்டையாக இருக்கிறது .
மத்திய அரசின் பட்டியலில் தாங்கள் யார் மாநில அரசின் பட்டியலில் தாங்கள் யார் என்பதே பல பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழப்பத்தில் அவர்களை தள்ளியது அவர்கள் சார்ந்த சமூக அமைப்பே காரணம் . உங்களுக்கான இட ஒதுக்கீடு இது தான் பட்டியிலன மக்களை போல இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர்களை விட கூடுதலாக நமக்கு தான் இட ஒதுக்கீடு உண்டு என்று சொல்ல அங்கு சமூக நீதி பேச தலைவர்கள் இல்லை .
சமூகத்திற்கு ஒரு நீதி என பேச தான் பல தலைவர்கள் உண்டு நாம் இட ஒதுக்கீடு அனுபவிக்கும் நிலையில் தான் இருக்கிறோம் இன்னும் நாம் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்க யாரும் முன்வருவார் இல்லை.
மாநில அளவில் இட ஒதுக்கீடு மாநிலத்திற்க்கு மாநிலம் மாறுபடும் தமிழக அளவில் 69% இட ஒதுக்கீடு பின்பற்ற படுகிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (26.5% )
இஸ்லாமியர்களுக்கு( 3.5% )
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (20%)
பட்டியிலன மக்களுக்கு (18%)
பழங்குடி மக்களுக்கு(1%) என உள்ளது.
இந்த இட ஒதுக்கீடில் யார் அதிகம் பயன்பெறுகிறார்கள் என வாசகர்கள் உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு -27% , பட்டியிலன மக்களுக்கு -15% ,பழங்குடி மக்களுக்கு-7.5%, பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு -10% என இட ஒதுக்கீடு உள்ளது.
இன்று பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் இட ஒதுக்கீடு என்பது பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் அழுத்தம் காரணமாக நேரு அரசு காகா கலேல்கார் தலைமையில் பிற்படுத்தப்பட்ட ஆணையம் 29-01-1953 இல் அமைக்கப்பட்டது அந்த ஆணையம் பல ஆய்வுகள் செய்து 1955 இல் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது .
அந்த அறிக்கையின் படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு -52% இட ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.ஆனால் அந்த பரிந்துரையை அரசு அமல்படுத்தவில்லை .
பாபாசாகேப் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இதுவும் முக்கிய காரணமாக இருந்ததுபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை என மிகவும் வருந்தினார் .
“I was very sorry that the Constitution did not embody any safeguards for the Backward Classes. It was left to be done by the Executive Government on the basis of the recommendations of a Commission to be appointed by the President.” — Dr. Ambedkar in his resignation letter from Nehru Cabinet
இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுளின் உரிமைக்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு இவர்கள் செய்யும் மரியாதை அவரின் சிலையை உடைப்பது செருப்பு மாலை போடுவது
தமிழகத்தில் பண்டிதர் அயோத்திய தாசர், தாத்தா இரட்டை மலை சினுவாசம் பிள்ளை, சிங்கார வேலர், M.C.ராஜா மற்றும் நீதி கட்சியை சேர்ந்த எண்ணற்ற தலைவர்களின் உழைப்பில் இட ஒதுக்கீடு அமலில் இருந்தது .
இந்த நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு பாதிப்புகள் வரும் வகையில் தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறையால் எனக்கு பாதிப்பு உள்ளது என செண்பகராமன் மூலம் வழக்கு ஒன்று பதியப்பட்டது தமிழகத்தில் அதற்க்கு கடுமையான எதிர்ப்பு போராட்டம் என நடைபெற்றத்தால் முதல் சட்ட திருத்தம் 1951 இல் நடந்தது
அந்த சட்ட திருத்தம் படி அரசியல் சட்டம் 15(4) 16(4) புதிய பிரிவில் கல்வியிலும் சமூக ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு என திருத்தப்பட்டது .
கல்வியிலும் சமூக ரீதியாகவும் நாம் ஏன் பின் தங்கிய நிலையில் உள்ளோம் என பிற்படுத்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் அதற்கான காரணத்தை வரலாற்றில் தேட வேண்டும் ஆனால் மாறாக புராணத்தில் வரும் கதைக்குள் தங்களை இணைத்து போலியான மகிழ்ச்சியில் மன நிறைவு அடைந்து கொள்கிறார்கள்.
மண்டல் கமிஷன் 31-12-1980 அவர்களின் அறிக்கையின் படியும் 27% இட ஒதுக்கீடு தர வேண்டும் என பரிந்துரை செய்யத பிறகும் நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது
அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் அரசு 07-08-1990 அவர் அமல்படுத்தினார் தனது ஆட்சி பறிபோகும் என எச்சரித்தும் எதையும் பொருட்படுத்தாமல் அமல்படுத்தி தனது ஆட்சியை பறிகொடுத்தார்.
ஆனால் அவரால் பயன் அடைந்த பிற்படுத்தப்பட்ட மக்களே அவரை நினைவில் கொள்ளவில்லை வி.பி.சிங் என்றால் யார் என்பது இன்றய டிக் டாக் ஆண்ட பரம்பரைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.
உங்கள் நட்பு வட்டத்தில் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு அதில் 10 இல் 2 பேர் சரியான பதில் சொன்னாலே ஆச்சரியம் தான் முடிந்தால் உங்கள் பதிலை இந்த கட்டுரையின் கமெண்டில் பதிவு போடுங்கள் நானும் அறிந்து கொள்கிறேன்.
அவர்களுக்கு தெரிந்தது நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது பட்டியிலன மக்களை ஆணவ கொலை செய்வது அவர்களின் உடைமைகளை சூறையாடுவதிலே கவணம் இருக்கிறது.
பட்டியிலன மக்கள் தான் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் என நம்பி வேறு உலகத்தில் வாழ்கிறார்கள் அதனால் அவர்களின் உரிமையை கூட அவர்களால் பாதுகாக்க முடியவில்லை .
இப்படி விழிப்புணர்வு இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கியது அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தான் . சமூக எதார்த்த நிலையை அந்த மக்களுக்கு உணர்த்தாமல் மக்களை உசுப்பி விட்டு தங்கள் சுய நலத்திற்குகாக ஜாதி கலவரங்கள் நடத்துகிறார்கள் .
சமூக்கத்தில் தங்களின் நிலை என்ன ?? நமக்கு எதனால் இட ஒதுக்கீடு என உணராமல் நான் உயர்ந்த ஜாதி ஆண்ட பரம்பரை என வீர வசனம் பேசினால் என்ன பயன்?? இன்றைய நிலையில் நமது நாட்டில் இட ஒதுக்கீடு பெறாதவர்கள் யாரும் இல்லை முன்னேறிய வகுப்பினர் கூட இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் .சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு என்று இருந்த நிலையில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவினருக்கும் இன்று இட ஒதுக்கீடு உள்ளது .
மருத்துவ படிப்பில் இருக்கும் இடங்களை மத்திய அரசின் தொகுப்பிற்கு வழங்க வேண்டும் என்பது விதி அப்படி மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் உள்ள இடங்களில் மத்திய அரசு தான் நிரப்பும் 27% இட ஒதுக்கீடு உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதில் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆனால் மத்திய அரசு அந்த இடங்களை எல்லாம் முன்னேறிய வகுப்பினர்க்கு வழங்கி உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 10000 மேற்ப்பட்ட இடங்கள் முன்னேறிய வகுப்பினர்க்கு வழங்க பட்டுள்ளது.அது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சேர வேண்டிய இடங்கள்.
கீழே பல பத்திரிகை செய்திகள் இணையத்தில் வந்த கட்டுரைகள் வாசகர்கள் எளிதாக புரிந்து கொள்ள இணைத்துள்ளேன்.
இப்போதும் விழித்து கொள்ளாமல் ஆண்ட பரம்பரை கனவில் மிதந்தால் இருக்கும் உரிமையும் இல்லாமல் போய்விடும். பல போராட்டங்களை பல இழப்புகளை சந்தித்து பலரது தியாகத்தால் கிடைத்த இட ஒதுக்கீடு அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் நாம் அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும்.
https://timesofindia.indiatimes.com/india/obc-quota-being-denied-in-medicine-courses-says-complaint-ncbc-seeks-govts-reply-in-15-days/articleshow/76039261.cms

Comments
Post a Comment