சாத்தன் சாம்பவர் (பரையர்)-தமிழர் வரலாறு
#சாத்தன்சாம்பவர் (பரையர்)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர் தான் இந்த சாத்தன் சாம்பவர் இவரின் முன்னோர்கள் #முற்காலபாண்டியவம்சத்தைசேர்ந்தவர்கள் ,
இந்த சாத்தன் சாம்பவர் பெயரில் தான் சாத்தான் குளம் பெயர் உருவாகியது இவருக்கு #அமராவதிநாச்சியார் என்கிற தங்கையும் அரும்பொன் சாம்பான் ,உடையமுத்து சாம்பான் என்கிற சகோதரர்கள் இருந்துள்ளார்கள் அமராவதி நாச்சியார் பெயரில் இன்றும் குளம் உள்ளது ... அந்த சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு குளங்கள் நீர் நிலைகள் சாத்தன் சாம்பவரால் அமைக்கப்பட்டுள்ளது ,
#கருமேனியறு இவரால் வெட்டப்பட்டுள்ளது ,ராதாபுரம் வள்ளியூர் முதல் மனப்பாடு வரை உள்ள கால்வாய் இவரால் வெட்டப்பட்டுள்ளது மேலும் திருச்செந்தூர் மாநாடு கைலாசநாதர் கோவில் இவரால் கட்டப்பட்டது ,திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 500 ஆண்டுகள் முந்தைய திருச்செந்தூர் பழைய சிவன் கோயில் சாத்தன் சாம்பவரின் முன்னோர்கள் கட்டியது ,
தன்னுடைய கணக்குகளை பார்க்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 7 வீட்டு கணக்குப்பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துக்கிறார் அவர்களின் பெண்ணான பாப்பாத்தி அம்மாளை காதலிக்கிறார் பெண்வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார் பின்பு தங்களின் குடும்பத்தினர் கேட்டுவிட்டு சொல்வதாக சொல்கிறார்கள், இதனிடையே தஞ்சாவூரை சேர்ந்த வேதநாயகம் கிருத்துவ மதத்தை பரப்ப திருவிதாங்கூர் பகுதிகளுக்கு செல்கிறார் ஆனால் அங்கு தலைமை அமைச்சர் வேலுதம்பிக்கு அது பிடிக்காமல் இவரையும் கெர்னல் மெக்காலேவையும் கொலை செய்ய படை ஒன்றை அமைக்கிறார் அவருக்கு பயந்து வேதநாயகம் சாத்தன் சாம்பவர் இடத்தில் அடைக்கலம் பெறுகிறார் ...
சாத்தன் சாம்பவர் காதலிக்கும் பாப்பாத்தி அம்மாளின் உறவினர் குஞ்சிகுட்டி பிள்ளை வேலுதம்பியின் உதவியாளர் ,குஞ்சிகுட்டிக்கு தங்கள் பெண்ணை சாத்தன் சாம்பவருக்கு கொடுக்க மணம் இல்லை மேலும் அவர் வேதநாயகதிற்கு அடைக்கலம் கொடுப்பது பிடிக்கவில்லை எனவே முதலில் ஒரு படையை அனுப்புகிறார்கள் அவர்களை சாத்தன் சாம்பவர் படை விரடியடிக்கவே பாப்பாத்தி அம்மாளை நிச்சயம் செய்ய வேண்டும் என அவரை கணக்குப்பிள்ளை வீட்டிற்கு வரவைக்கிறார்கள் வரும் வழியில் கேரளாவில் யானைகளை பிடிக்க பயன்படுத்தப்படும் பொய்க்குழி வெட்டி வைக்கிறார்கள் சாத்தன் சாம்பவர் தன் குதிரையோடு அதில் விழுகிறார் அவரை அம்பு விட்டு அந்த குழியிலேயே கொன்று மன்னைப்போட்டு மூடிவிடுகிறார்கள் பின்பு
அந்த அரண்மனையை சூறையாடி அங்கு இருப்பவர்களை கொன்று விடுகிறார்கள் இதை பார்த்த பாப்பாத்தி அம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்...இந்த நிலைமையிலும் அடைக்கலம் தந்த வேதநாயகத்தை ஒரு சிலர் பாதுகாப்பாக வெளியேற்றி அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறார், சாத்தன் சாம்பவர் சகோதர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் தப்பித்து சாயல்குடி பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள் ,
இன்றும் சாத்தன் சாம்பவர் மற்றும் பாப்பாத்தி அம்மாளுக்கு நடுகல் வைத்து வணங்குகிறார்கள் இந்த தகவல்களை சாத்தன் சாம்பவரின் சந்ததியை சேர்ந்த திரு High court பாண்டியன் தமிழன் தொலைக்காட்சியில் பகிர்ந்து கொண்டார் ...இவை நடந்த காலம் 1761 மேலும் இது குறித்து நூல்களும் ஆதாரத்துடன் வந்து இருப்பதாக தெரிவித்தார்
Comments
Post a Comment