வஞ்சிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மக்கள் OBC(BC+MBC)

இட ஒதுக்கீடு என்றால் என்ன அது எதற்கு வழங்க படுகிறது யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்கிற புரிதல் பலருக்கு இல்லை.இட ஒதுக்கீடு என்றால் பட்டியிலன மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டும் தான் என ஒரு பொது புத்தி உள்ளது.நமக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாதது பெரும் பின்னடைவு. மேடை தோறும் முழக்கமிடும் அரசியல்வாதிகள் பட்டியிலன மக்களுக்கு தாங்கள் தான் எல்லாம் செய்தோம் என போட்டி போட்டுக்கொண்டு பொய்களை பரப்பவே நேரம் சரியாக இருக்கும். பண்டிதர் அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சினுவாசம் பிள்ளை பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் தங்கள் உழைப்பால் வாங்கிக்கொடுத்த உரிமைகள் எல்லாம் இவர்களும் இவர்கள் தலைவர்களும் இயக்கங்கள் நடத்தியும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தும் வாங்கி கொடுத்தது போல பேசுவார்கள் . இவர்களின் தலைவர்களும் இவர்களும் முதலமைச்சர் ஆவதும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் ஆவதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் என மறந்துவிடுகிறார்கள் திட்டமிட்டு மறைத்தும் விடுகிறார்கள்.சொத்தும் நிலமும் இருந்தால் தான் ஓட்டுரிம...